சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி

தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின்  முக்கிய நோக்கமான கிராஸ் ரூட் லெவல் (சிறுவர்களுக்கான கால்பந்து) போட்டியை  பள்ளி வளாகத்தில்  துவக்கியது. தி யுனைடெட் பப்ளிக் பள்ளி  கால்பந்து அகாடமியும், மை லைஃப் கால்பந்து அகாடமி இரண்டு அணிகளும் ஹோம் அண்ட் ஹவே என்ற முறையில் கால்பந்து லீக் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது .10,13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வீரர்கள் ஆடுகளத்திற்கு செல்லும் தருணத்தில்  அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இசை முழங்க விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் துவக்க நிகழ்ச்சிக்கு யுனைடெட் கல்வி நிறுவனங்களின் இணை தலைவர் முனைவர். மைதிலி சண்முகம் அவர்கள் போட்டியை துவக்கி வைத்தார். தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி மற்றும் துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுனைடெட் கல்வி நிறுவனங்களின்   உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.