கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் 52-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் 52-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளானது (மாநில போட்டிக்கான தேர்வு போட்டிகள்)    அகாடமி வளாகத்தில் அகாடமி பொருளாளர் ஆசிரியர்  S.கணேஷ்குமார் தலைமையிலும், செயலாளர் R.மாடசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ் நாடு மாநில சதுரங்க நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர்        S. அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்,     வனச்சரகர் (ஓய்வு) S.அமானுல்லா அவர்கள் போட்டிகளை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளராக லட்சுமிபுரம் G. சீனிவாசன் நினைவு மாற்றுமுறை மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர்  மரு.S. சாந்தி அவர்களும் டாக்டர் P.V. கிருஷ்ணவேணி  BHMS., MCAH அவர்களும்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். வெற்றி பெற்றோர்  விபரம்: 

8 – வயது பிரிவில் 1.A.நித்தின்ராஜ் 2.S.சிந்து ஜஸ்வின், 3, N.மோனிஷா 4. S.சர்வேஷ்வர் 5. R. சர்வேஷ் 6. சித்திக்நரேன் 7,M.யேகாமித்திரா 8, B.ஹனிசக்திஹா 

10 – வயது பிரிவில் 1, J.தியாஶ்ரீ 2,M.தேகந்,3,ஸ்ரீஆக்னியா 4, R.இஷான் 5,லேகேஷ் சக்தி, 6. R.செல்வநிரன்ஜன் 7, V. ஹர்ஸ்னி 8,T.தன்யாஸ்ரீ,

12-வயது பிரிவில் 1.N.ராஜாமுகமது,2, S.P.புவன்சங்கர் 3, R.நிலேஷ்முகுந்தன் 4. S.சாய்ரிஷி 5,S.ஜெய் ஹர்ஸினி 6, R.சாத்விகா 7. R.பரத், 8, V. ஶ்ரீ கீர்த்திகா 

14-வயது பிரிவில் 1.K.அஸ்வத், 2, V.தாரணிக்காஸ்ரீ 3,B.சித்தேஷ் 4, வர்சினிபிரியா 5,S.பரணி, 6. S.நாகபிரனேஷ் 7, B.சுஜய் 8, J. சன்ஜெய்குமார்  ஆகியோர் வெற்றிபெற்றனர், இவர்கள் 32 பேரும் வரும் மார்ச் 3-ம் தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெறவுள்ள IPL சதுரங்க திருவிழா மற்றும் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வாகிவுள்ளனர் என்பது குறிபிடதக்கது.