மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியானது கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் அமைந்துள்ள தூய அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் வைத்து கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இருந்து பல அணிகள் பங்கு கொண்டது, இறுதிப்போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணியும், நாகர்கோயில் தோலையவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி அணிகளும் விளையாடியது, முடிவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி 36-19 என்ற புள்ளிகள் முன்னிலையில் தொடர்ந்து 8 வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்த பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான போட்டியின் முடிவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதலிடமும், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அணி இரண்டாம் இடமும், தூய அல்போன்சா கல்லூரி அணி மூன்றாம் இடமும், அம்பை கலை கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி பேராசிரியரையும் கல்லூரி கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர், கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள். மற்றும் மாணவ- மாணவியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply