அண்ணா பல்கலை விளையாட்டு வாரியம் சார்பில் இடைமண்டல கைப்பந்து ஆண்கள், பெண்களுக்கான போட்டி பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்தது.
12 அணிகளும் கலந்து கொண்டதில் ஆண்கள் பிரிவில் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி, கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி, கிண்டி பொறியியல் கல்லுாரி, நெல்லை பி.எஸ்.என்., கல்லூரி ஆகிய 4 அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன . பெண்கள் பிரிவில் பி.எஸ்.என்.ஏ.,, ஈரோடு கொங்கு பொறியியல் கல்லுாரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லுாரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி 4 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன .
ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி கோவை ஸ்ரீ சக்தி கல்லுாரியை வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் கொங்கு பொறியியல் கல்லுாரியை வீழ்த்தி பி.எஸ்.என்.ஏ., வெற்றி பெற்றது. சென்னை அண்ணா பல்கலை விளையாட்டு வாரிய தலைவர் செந்தில் குமார், செயலர் பாலகுமரன், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி தலைவர் ரகுராம், முதல்வர் வின்சென்ட் ஆண்டனி குமார், உடற்கல்வி இயக்குனர் விஜய் பங்கேற்றனர்

Leave a Reply