சர்வதேச தடகள போட்டி

விழுப்புரத்தை சேர்ந்த நகராட்சி பள்ளி மாணவி சுபஸ்ரீ, சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பூங்கொடி. இவர்கள், மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் சுபஸ்ரீ, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான சுபஸ்ரீ, எட்டு வயது முதல் 17 வயது வரை தொடர்ந்து ஓட்டப்பந்தயத்திற்கு பயிற்சி பெற்று வந்தார்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 10வது சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில் சுபஸ்ரீ பங்கேற்றார்.

இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்