அகில இந்திய அளவிலான கிரிக்கெட் தொடர் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாம் இடம்

அகில இந்திய அளவிலான கிரிக்கெட் தொடர் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாம் இடம் :

மஹாராஷ்டிர – கோவா மாநில எல்லையில் அமைந்துள்ள சவந்த்வாடி நகரில் ஜனவரி 28 துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை  S K கிரிக்கெட் அகாடமி சார்பாக U16 அகில இந்திய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, மஹாராஷ்டிர, கர்நாடகா, கோவா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டு மோதின இதன் இறுதி போட்டிக்கு கோவா அணியும் நம் தமிழகத்தின் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும் தேர்வாகி மோதின இதில் கோவா அணி வெற்றி பெற்றது, இரண்டாம் இடத்துக்கான கோப்பையுடன் சேர்த்து போட்டி நடுவர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தொடரின் ஒழுக்கமான் அணி என்கிற சிறப்பு பரிசும் வென்றது,

இத்தொடர் வீரர்களுக்கு புதிய சூழ்நிலையில், புதிய அணிகளுடன் விளையாடிய சிறந்த அனுபவத்தை கொடுத்ததாக பரிசளிப்பு விழாவில் காஞ்சி கிரிக்கெட் பயிற்சியாளர் திரு. வினோத்குமார் தெரிவித்தார்