சிஐஎஸ்சிஇ தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மண்டல கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்குட்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ஷின்கேன் ஸ்போர்ட்ஸ் காரத்தே அகாடெமி மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்தனர்.17 வயதுகுட்பட்ட 48 கிலோ எடை பெண்கள் குமித்தே பிரிவில் M.மோனிஸ்ரீ தங்கபதக்கமும்,52 கிலோ குமித்தே பிரிவில் K.S.இனியா தங்கபதக்கமும் வென்றனர்.14 வயதுகுட்பட்ட 38 கிலோ எடை குமித்தே பிரிவில் A.அஷ்விதா வெள்ளி பதக்கம் வென்று அசத்தினர்.பதக்கங்கள் வென்ற மாணவிகளை உலக கராத்தே நடுவரும் ஷின்கேன் அகாடெமியின் பயிற்ச்சியாளர் சென்சாய் கணேஷ் மூர்த்தி மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Leave a Reply