அகில இந்தியா ஹாண்ட்பால்  கற்பகம் பல்கலை. இரண்டாம் இடம்

அகில இந்தியா அளவிலான ஹாண்ட்பால் போட்டி  புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட   அணிகள் கலந்து கொண்டனர்.  முதல்   போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் SVN மதுரை  அணியும் எதிர்கொண்டது.இதில் 35- 14 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் டீம் யுனைடெட் கர்நாடகா அணியை எதிர்கொண்டது.இதில் 28-25  என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும்

மதுரை காவல்துறை அணியை எதிர்கொண்டது.இதில் 33-20 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் தமிழ்நாடு காவல்துறை அணியை எதிர்கொண்டது.இதில் 35- 39என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி  பெற்றது . கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி

 உடற்கல்வி இயக்குனர் சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன்  உள்ளிட்டோர் பாராட்டினார்.