கோவையில் ஐபிஎல் கிரிக்கெட் போல் கேபிஎல் கிரிக்கெட் போட்டி. 

கோவையில் ஸ்போர்ட்ஸ் 1 நாளிதழ் மற்றும்  சேனல் சார்பாக  கோவை பிரீமியர் லீக்  கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இந்த கிரிக்கெட் போட்டியானது வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது முன்னதாக ஐபிஎல் போலவே கிரிக்கெட் வீரர்களுக்கான ஏல முறையில் தேர்வு நடைபெற்றது. கோவை ராம் நகரில் உள்ள விஜய் பார்க் இன் ஓட்டலில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 236   கிரிக்கெட் வீரர்கள்  கேபிஎல் சீசன் 1 ல் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர் இதில் MSB பிரேக்கர்ஸ்,அதிபன் வாரியர்ஸ்,யோகன் சி.சி,TVK தமிழன்ஸ்,பொள்ளாச்சி பிரண்ட்ஸ் சி.சி,மில்லினியம் சி.சி,மேவரிக்ஸ் சி.சி,PNY சி.சி.உள்ளிட்ட 8 அணிகள் ஏலாத்தில் பங்கேற்று  வீரர்களை தேர்வு செய்தனர். ஒவ்வொரு அணியும் தலா 16 வீரர் என மொத்தம் 128 வீரர்கள் தேர்வு செய்யபட்டனர். அவர்கள் அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்துள்ளனர்.