மதுரை திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் நடந்த இன்ட்ரா கிளப் ஹாக்கி போட்டிகளில் ட்ராகன் பாய்ஸ் அணி சாம்பியன் வென்றனர்.
மூன்று நாட்கள் நடந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தார். 120 பேர் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
லீக் முறையில் நடந்த பத்து போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்ற ட்ராகன் பாய்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். கோல் ஹண்டர்ஸ் அணியினர் 2ம் இடம், டிபன்டர்ஸ் அணி 3ம் இடம், ட்ரிபிளர்ஸ் அண்டு டாக்லர்ஸ் அணி 4ம் இடம், பேட்டில் வாரியர்ஸ் அணி 5ம் இடம் பிடித்தனர். கவுன்சிலர் சுவேதா பரிசு வழங்கினார். கிளப் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சத்யராஜ், சத்தியசீலன, வினோத்குமார், ரமேஷ்குமார், கிஷோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Leave a Reply