மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கிப்போட்டிக்கு இன்று ஹரித்துவாருக்கு புறப்படுகிறது*
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் மூன்றாவது இடம்பெற்று அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்றது பிப்ரவரி 22 முதல் 28 வரை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெறவுள்ள அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியாவில் இருந்து தலைசிறந்த 16 பல்கலைக்கழக ஹாக்கி அணி கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணியின் தலைவர் கோவில்பட்டி கே ஆர் கலைக்கல்லூரி வீரர் மனோஜ் குமார் பயிற்சியாளர் முத்துக்குமார் அணியின் மேலாளர் கடையநல்லூர் அரசு கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி அணியின் மனநல மருத்துவர் பாலாஜி மற்றும் கே ஆர் கலைக் கல்லூரியில் இருந்து திவாகரன் (கோல்கீப்பர்), வேல் ராகவன், ராமநாதன், நந்தகுமார், இசக்கிமுத்து, நா.அரவிந்த், கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இருந்து முரளி கிருஷ்ணன், பாலச்சந்தர் , நவீன் ராஜ்குமார், நிசி தேவ அருள் , மகேந்திரன் (கோல்கீப்பர்) நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து மதுபாலன், வி .அரவிந்த், முருகேசன், கோவில்பட்டி துரைசாமி மாரியம்மாள் கல்லூரியில் இருந்து சீனிவாசன் , விஷால், பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து மனோரஞ்சித்,
உள்பட 18 வீரர்களையும் இன்று மாலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடறக் கல்வித் துறை இயக்குனர் முனைவர் எஸ் ஆறுமுகம் தலைமையில் வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர் விழாவில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளர் ஜெயரத்தின ராஜ் , கே .ஆர்.கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராம்குமார், நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ், புளியங்குடி மனோ கல்லூரி உடற் கல்வி இயக்குனர் குமரேச சீனிவாசன், தூத்துக்குடி வ உ சி கல்லூரி உடற் கல்வி இயக்குனர் சிவஞானம், கோவில்பட்டி அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பூபதி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, பொறுப்பாளர்கள் மாரியப்பன், ஈஸ்டர், மேரி வினோ, மகாலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply