மதுரை மாவட்ட காலபந்து சங்கம் நடத்தும் அகாடெமி கமிட்டி லீக் கால்பந்து போட்டி

மதுரை மாவட்ட காலபந்து சங்கம் நடத்தும் அகாடெமி கமிட்டி லீக் கால்பந்து போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர் மைதானத்தில் நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில் உள்ள அகடாமி கிளப் அணிகளுக்கான 10வயதுகுட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து லீக் தொடர் போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்ட முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து இரண்டாம் சுற்று செப்.21,22 தேதிகளில் நடைபெறுகிறது.

முதல் சுற்று முடிவுகள்

ஏரியன் எப்.ஏ அணி 6-0 என்ற கோல் கணக்கில் வல்லபா அணியை தோற்கடித்தது, அக்மி எரினா அணியும் உசிலை எப்.சி அணியும் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்தது. அக்மி எப்.ஏ அணி 5-0 என்ற கோல்கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ அணியை தோற்கடித்தது, டான்பாஸ்கோ ஐ.டி.ஐ அணி 0-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.டான்பாஸ்கோ சூரியா நகர் அணி 0-4 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் எஸ்.எஸ் அணியிடம் தோல்வியுற்றது. அக்மி எப்.ஏ அண் 6-0 என்ற கோல்கணக்கில் ஜெயபால் எஸ்.சி அணியை வீழ்த்தியது