“1வது தேசிய சிலம்பம் போட்டி
கற்பகம் பல்கலை. தங்க வேட்டை
கன்னியாகுமரி மாவட்டம் சி.எஸ்.ஐ. இன்டோர் ஸ்டேடியத்தில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய “முதலாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்
போட்டியில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இந்தியாவின் 22 மாநிலங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு கோயம்புத்தூர் சார்பில் கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் இருபத்தி எட்டு தங்கப் பதக்கமும், மூன்று வெண்கலப் பதக்கமும் சேர மொத்தம் முற்பத்தி ஒன்று பதக்கங்கள் வென்றனர். இதில் ஆண்களுக்கான கம்பு வீச்சு பிரிவில் கௌதமகிருஷ்ணன், அலங்கார வீச்சு பிரிவில் சசிதரன்,வேல் கம்பு வீச்சு பிரிவில் கோகுல்ராஜ், ஒற்றை வால் வீச்சு பிரிவில் லிலதரன், ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் விஜய சந்தோஷ், இரட்டைக் கம்பு வீச்சு பிரிவில் முத்துப்பாண்டி, இரட்டை வால் வீச்சு பிரிவில் தசாதரன், இரட்டை சுருள் வால் வீச்சு பிரிவில் மணியரசு,ஆயுத கோர்வை ஜோடி பிரிவில் கவின்சங்கர் மும்மூர்த்தி, குழு ஆயுத வீச்சு பிரிவில் வெங்கடேஷ், ரித்தீஷ், கமல கண்ணன் மற்றும் கம்பு சண்டை போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் கோகுல் ராஜ் , 55 கிலோ எடை பிரிவில் மும்மூர்த்தி, 60 கிலோ எடை பிரிவில் விஜய சந்தோஷ் ,65 கிலோ எடை பிரிவில் கௌதமகிருஷ்ணன்,70 கிலோ எடை பிரிவில் வெங்கடேஷ் , 75 கிலோ எடை பிரிவில் தசாதரன் ,85 கிலோ எடை பிரிவில் லிலாதரன், பெண்களுக்கான அலங்கார வீச்சு பிரிவில் பிரசீலா ஏஞ்சல்,ஒற்றை வால் வீச்சு பிரிவில் மரியரீட்ட,இரட்டை சுருள் வால் வீச்சு பிரிவில் ராஜம்,மான் கொம்பு வீச்சு பிரிவில் ரமணி, கம்பு சண்டை போட்டியில் 45 கிலோ எடை பிரிவில் பிரசீலா ஏஞ்சல், 50 கிலோ எடை பிரிவில் ராஜம், 65 கிலோ எடை பிரிவில் மரியரீட்ட,80 கிலோ எடை பிரிவில் ரமணி, ஆகியோர் தங்கம் பதக்கமும் , ஆண்களுக்கான கம்பு சண்டை போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் கோகுல் ராஜ்,55 கிலோ எடை பிரிவில் முத்துப்பாண்டி, 65 கிலோ எடை பிரிவில் கமல கண்ணன் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக தாளாளர் முனைவர் வசந்த குமார் முதனமையர் முருகையா துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற் கல்வித் துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டொர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply