சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேசிய கராத்தே போட்டி நடந்தது இதில் தமிழ்நாடு கர்நாடகம் கேரளா ஆந்திரா புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் வாழப்பாடி புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தனிப்பிரிவு கட்டா, குமித்தே மற்றும் குழு கட்டா ஆகிய பிரிவுகளில் கலந்துகொண்டு 10 பேர் முதல் பரிசு 19 பேர் இரண்டாவது பரிசும் 34 பேர் மூன்றாவது பரிசும் பெற்று சாதனை படைத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் அந்தோணியம்மாள் தலைமை ஆசிரியர் ராணி, கராத்தே பயிற்சியாளர் சங்கரன் உடற்கல்வி ஆசிரியர் செல்வம் உள்பட பலர் பாராட்டினர்.

Leave a Reply