தேசிய அளவிலான வில் அம்பு போட்டிகோவை மாணவர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்
தேசிய அளவிலான வில் அம்பு போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சார்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, டெல்லி, மகாராஸ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டம் சார்பாக ஏகன் ஷூட்டிங்க் அகேடமி சார்பாக 16 பேர் பங்கேற்றனர். புரவஷ்னல் கேட்டகிரியில் 8 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவி கவியாழினி. பிரதிக்ஷா ஆகியோர் தலா ஒரு தங்கமும் ஸ்ரீ சுஷாந்த் ஒரு வெள்ளியும் வென்றனர். 12 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஹரிஹரசுதன் ஒரு வெண்கலம் வென்றார். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவன் அபினவ் ஒரு தங்கம் வென்றார்.அதேபோல, பிகின்னர் கேட்டகிரி 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணன் கிஷில் ஒரு தங்கமும், லலித் ஆதித்யா ஒரு வெண்கலம் வென்றார். 12 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் லித்ரன், சாய்வருன், அபிஜித், சவஸ்திக் ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றார். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஜெசந்த் ஒரு தங்கம் வென்றார். 30-35 வயதிற்கு உட்படோருக்கான பிரிவில் ரூபன் ராஜ் ஒரு தங்கமும், லோகேஷ் ஒரு வெள்ளியும் வென்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர்கள் ராஜ் கப்பூர் மற்றும் வித்யா ஆகியோர் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply