தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தென் மாவட்டத்தை சேர்ந்த கராத்தே மாணவர்கள் கோப்பை வென்று அசத்தல்
சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் சார்பில் 6 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2.02.25 அன்று நடைபெற்றது.
இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். தமிழ்நாடு மாநில கராத்தே செயலாளர் சென்சாய் செந்தில் தலைமையில் விருதுநகர் மாவட்ட சி இ ஓ ஏ மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 10 வயது பெண்கள் கட்டா பிரிவில் ஹர்சிதா முதல் பரிசும் ,முகேஷ், சாய் கைலாஷ் ஆகியோர் இரண்டாம் பரிசும் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் இயக்குனர் திரு.சிவப்பிரகாசம் மற்றும் பள்ளியின் முதல்வர் தாட்சியாயினி தேவி ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply