ரிலையன்ஸ் பவுண்டேஷன் யுத் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

ரிலையன்ஸ் பவுண்டேஷன் யுத் ஸ்போர்ட்ஸ் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான மண்டலம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் கால்பந்து போட்டிகள் நடப்படுகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் அத்யாயனா பள்ளி மற்றும் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
இதில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவியர் மற்றும் 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவியர் 15 வயது பிரிவில், நடைபெற்ற இறுதி போட்டியில் ஈரோடு எம்.ஆர்.ஜி., அரசு பெண்கள் பள்ளி அணி 9 – 0 என்ற கோல் கணக்கில் பிச்சனுார் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

மாணவர்கள் 17 வயது பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் பயனீர் மெட்ரிக்., பள்ளி அணி 8 – 1 என்ற கோல் கணக்கில் தி அத்யாயனா பள்ளியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
19 வயது பிரிவின் இறுதி போட்டியில் ராகவேந்திரா பள்ளி அணி 6 – 0 என்ற கோல் கணக்கில் ராஜேந்திரன் மெட்ரிக்., பள்ளியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு , கோப்பை மற்றும் சான்றிதழ் ரொக்கம் வழங்கப்பட்டன