தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்து அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. 2023 – 2024 ஆண்டிற்கான ஆண்களுக்கான ஹாக்கி போட்டியானது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஆறு மாநிலங்களை சார்ந்த பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன. இதில் 70-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆண்கள் ஹாக்கி அணியானது பங்கு பெற்றது. காலி இறுதிப் போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணியானது கேரளப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து விளையாடியது இதில் 8-2 என்ற கோல் கணக்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று தகுதி சுற்றுக்கு நுழைந்தது. தகுதி சுற்றில் நடைபெற்ற முதல் போட்டியில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் பல்கலைக்கழகத்தை எதிர்த்து விளையாடி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணியை 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் சிட்டி பல்கலைக்கழக அணியுடன் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியின் பயிற்றுநராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பயிற்றுநர் முத்துக்குமார் அவர்களும், அணியின் மேலாளராக கடையநல்லூர் அரசு கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி அவர்களும் பங்கு பெற்றார்கள்… வெற்றி பெற்ற அணியினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள் பாராட்டினார். மேலும் ம.சு. பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனரும் உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டு துறை தலைவர் உதவிப் பேராசிரியர் முனைவர் சு. ஆறுமுகம் அவர்கள் பாராட்டினர்..

We love the way they played the match ROCKERS ALWAYS ROCKING