ஐவர் கால்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி இரண்டாம் இடம்

கோவை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி சார்பாக அலுமினி 2024 கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது இதில் கோவை மாவட்ட முழுவதிலும் இருந்து 32 கல்லூரி அணிகள் போட்டியில் பங்கேற்றனர். நடைபெற்ற இறுதி போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி அணியும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி அலுமினி அணியும் மோதின ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டை ஆனாதை அடுத்து சூட்-அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி அணி முதல் இடம் பிடித்தனர்.இரண்டாம் இடத்தை ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி அணி பிடித்தனர்.இரண்டாம் இடம் பிடித்த ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி அணியை கல்லூரி முதல்வர் சுமித்ரா,உடற்கல்வி இயக்குனர் மாரிசெல்வம் உள்ளிட்டோர் பாராட்டினர்