பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின குழுமப்போட்டிகள் நாமக்கல் மாவட்டம் தொட்டியத்தில் நடந்தது. மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்றன.
மாநில அளவிலான 19-வயதுக்குட்பட்டோருக்கான டேபிள்டென்னிஸ் பெண்கள் பிரிவில் பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ்செல்வி, ஹரிணி ஆகிய மாணவிகள் ரெட்டையர் பிரிவில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஒற்றையர் பிரிவில் தமிழ்செல்வி எ 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

Leave a Reply