கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டி – சென்னை பல்கலைக்கழக ஹாக்கி அணி சாம்பியன்*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில்
பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக முன்னாள் தலைவர் U. அய்யாச்சாமி நினைவு 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை, கோவை ,நெல்லை கன்னியாகுமரி, திருப்பூர், விருதுநகர் தேனி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்தும் 25 அணிகள் பங்கேற்றன. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வந்த போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் சென்னை பல்கலைக்கழக ஹாக்கி அணி மற்றும் கோவில்பட்டி ஏ.எம்.சி ஹாக்கி கிளப் அணிகள் மோதின. இதில் 1 – 0 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழக ஹாக்கி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது

Leave a Reply