மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டி

மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி எம்.சஹானாஸ்ரீ முதலிடம், மாணவி பி.ராகவி, பி.கனிஷ்கா 2ம் இடம், மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் மாணவன் ஜெ.மகிலேஷ் முதலிடம், ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டு பிரிவிலும் மாணவி எஸ்.தீக்ஷனா முதலிடம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.