மாநில அளவிலான வூசூ போட்டி

கேலோ இந்தியா சார்பாக பெண்களுக்கான மாநில அளவிலான வூசூ போட்டி கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திண்டுகள். கன்னியகுமாரி, நீலகிரி, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கோவை மாவட்டத்தில் இருந்து 38 பேர் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சப்-ஜூனியர், ஜூனியர் யூத் மற்றும் சீனியர் கேட்டகிரியில் போட்டிகள் நடந்தது. சான்சூ பிரிவில் நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் அணி முதலிடமும், கோவை அணி இரண்டாம் இடமும், திருவண்ணாமலை அணி மூன்றாம் இடமும் பிடித்தது. தவுளு பிரிவில் திண்டுகல் அணி முதலிடமும், கோவை அணி இரண்டாம் இடமும், சேலம் அணி மூன்றாம் இடமும் பிடித்தது. சான்சூ மற்றும் தவுளு பிரிவுகளில் கோவை அணியினர் சிறப்பாக விளையாடியதால் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை மாவட்ட ஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார் மேலும், தமிழ்நாடு ஆசூ அசோசியேஷன் தலைவர் அலெக்ஸ் அப்பாவு. பொதுச் செயலாளர் ஜான்சன், அதித்யா வணிக மேலாண்மை கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர் சுந்திரபாண்டியன் நடராஜன், இந்திய பாரா த்ரோபால் கூட்டமைப்பின் தலைவர் அல்பர்ட் ப்ரேம் குமார். ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சோம சுந்தரேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ரங்கநாதன், கல்லூரியின் வழக்கறிஞர் வெங்கடேஷன் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.