தமிழக மல்யுத்த அணிக்கு திருப்பூர், கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சித்தார்த் மற்றும் தீபக் இருவரும்
தேர்வாகியுள்ளனர். இதன் மூலம் டிச., 17 – 22 புதுடில்லியில் நடக்கும் தேசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அணிக்கு தேர்வாகி, தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்கள் இருவரை, பல்லடம் தங்கலட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நடராஜன் பாராட்டி, ரொக்கப்பரிசு வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சிவக்குமார், உதவித் தலைமை ஆசிரியர்கள் கர்ணல், வசந்தாமணி, உடற்கல்வி இயக்குனர் புஷ்பவதி, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் உள்ளிட்டோரும் மாணவர்களை பாராட்டினர்.

Leave a Reply