![]() ஹயாஷிஷா கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கடந்த வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தலைமை பேராசிரியர் சீகான் விஎம்சி மனோகரன் அவர்கள் தலைமையில் கராத்தே பயிற்சி முகாம் மற்றும் கருப்பு பட்டய தேர்வு நடைபெற்றது இதில் பேரூர், கோவைப்புதூர் மற்றும் தீத்திபாளையம் ஆகிய பகுதிகளில் சென்சாய் சதீஸ் தலைமையில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் பரத் விக்னேஷ், ராம்ஜி, ஹனீஸ், சஷ்வந்த், சஞ்சித் கிருஷ்ணன்,தமிழரசி, தச்சினேஷ், யுத்திக்கா,அஜய், பிருத்விராஜ், மகாலட்சுமி, அரவிந்த் பாண்டியன், தினேஷ்குமார், தியா ஸ்ரீ, தர்ஷனா,மிதுன், ஆசிர்வாதம், ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் பயிற்சி முகாமின் இறுதியில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. |


Leave a Reply