கோவையைச் சேர்ந்த ஆதவன் சுகுணா பிப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.ஆதவனின் விளையாட்டு திறமையினால் 16 வயதிற்குட்பட்டோர் இந்திய கூடைப்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே தெற்காசிய கூடை பந்தாட்ட கழகம் இலங்கையில் நடத்திய தகுதி சுட்டு போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்றவர் தற்பொழுது இந்த மாதம் இறுதியில் கத்தாரில் நடைபெற உள்ள ஆசியா சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டிகளுக்கு விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார்.
எனவே கூடைப்பந்து வீரர் ஆதவனை பாராட்டு விதமாக இன்று அவரது பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.அதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆதவன் இந்திய அளவில் தேர்ச்சி பெற்று தற்போது ஆசிய அளவில் விளையாட இருப்பதினால் ஆதவனுக்கு படிப்புச் செலவு மற்றும் இதரச் செலவுகள் அனைத்துமே கல்வி நிர்வாகமே ஏற்றுள்ளது.
இதுபோல் விளையாட்டு திறமைகள் உள்ள மாணவர்களை தங்கள் பள்ளியில் இலவசமாக சேர்ந்து படிக்க உதவி வருவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டுகளில் திறமை உள்ள மாணவர்களுக்கு பள்ளி சார்பாக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தர இருப்பதாக கூறினார்.
விளையாட்டில் அதிகமாக திறமை கொண்ட மாணவர்களுக்கு 50% முதல் 100% வரை கல்வி கட்டணத்தில் சலுகை இருப்பதாகவும் பள்ளியின் உரிமையாளர் லட்சுமி நாராயண சாமி தெரிவித்தார்.

Leave a Reply