கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் கனிணி அறிவியல் துறையை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஜீவிதா ஏ,முதலாம் ஆண்டு மாணவி அனே அஜிதா ஏ அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிக்கு இடையேயான பெண்கள் கால் பந்து போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் ஈர்த்துள்ளனர் இவர்களின் சிறந்த விளையாட்டின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தால் பிரதிநித்துவப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அடுத்த நிகழ்வாக அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடியில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக்கழக கால் பந்து போட்டியில், அண்ணா பல்கலைக்கழக அணியில் இணைந்து விளையாட உள்ளார்கள். இவர்களை பாராட்டி கல்லூரியின் நிர்வாகத்தினர்,முதல்வர், பேராசிரியர்கள்,மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மாணவிகளின் வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவர்களின் சாதனை கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையிலும் அமைகிறது.

Leave a Reply