மண்டல அளவிலான போஸ்டல் பிரிமியர் லீக் கிரிக்கெட்

போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்-கோவை மான்செஸ்டர்ஸ் அனி சாம்பியன்

அஞ்சல் துறை மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான போஸ்டல் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோயம்புத்தூர் மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அஞ்சல் துறை மேற்கு மண்டலம் 14 அணிகளை கொண்ட போஸ்டல் பிரிமியர் லீக் என்ற கிரிக்கெட் தொடரினை கடந்த 17ஆம் தேதி முதல் நடத்தி வந்தது இதில் சேலத்தில் ஏழு அணிகளுக்கும், கோவையில் 7 அணிகளுக்கும் போட்டிகளும் நடைபெற்று வந்தன. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்  கோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் திருப்பூர் போஸ்டல் பயனீர்ஸ் அணி தர்மபுரி தண்டர் கிங்ஸ் அணியினை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரைஇறுதி போட்டியில் கோவை மான்செஸ்டர் அணி கிருஷ்ணகிரி ஸ்பார்ட்டன்ஸ் அணியினை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கோவை மற்றும் திருப்பூர் அணிகளுக்கான இறுதிப் போட்டியில் கோவை அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய திருப்பூர் அணி 10 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இணைந்து 66 ரன்களை மட்டுமே எடுத்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவை மான்செஸ்டர்ஸ் அனி கோப்பையினை தட்டிச்சென்றனர்.

வெற்றி பெற்ற கோவை மான்செஸ்டர் அணிக்கு கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் சரவணன் மற்றும் மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குனர் அக்கில் நாயர் ஆகியோர் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினர் இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கோவை மான்செஸ்டர் அணியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் சிறந்த பவுலராக திருப்பூர் அணியை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் பரிசு பெற்றனர். இறுதிப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் மட்டும் 20 ரன்களை விளாசிய கோவை மான்செஸ்டர் அணியின் தினேஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். போட்டி ஏற்பாடுகளை ஆர்.எம்.எஸ் கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ்பாபு செய்திருந்தார்.